ராஜா தினகர் கேல்கர் அருங்காட்சியகம்
ராஜா தினகர் கேல்கர் அருங்காட்சியகம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் உள்ளது. இது மருத்துவர் தினகர் ஜி. கேல்கரின் (1896-1990) தொகுப்புகளை, இவரது ஒரே மகன் ராஜாவின் நினைவாகக் காட்சிப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூன்று மாடிக் கட்டிடத்தில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு சிற்பங்கள் உள்ளன. யானைத் தந்தம், வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், இசைக்கருவிகள், போர் ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Read article